கலிஃபோர்னியா காட்டுத்தீயில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Monday, 19 November 2018 - 19:44

%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக குறைந்தது 80 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தவிர, 993 பேர் காணாமல் போய் உள்ளதுடன், 9 ஆயிரத்து 700 வீடுகள் முற்றாக அழிந்துள்ளன.

அடுத்த வாரம் அந்த பிராந்தியத்தில் எதிர்பார்க்கப்படும் கடும் மழை பெய்ய தவறும் பட்சத்தில், எதிர்வரும் 30ஆம் திகதி வரை இந்த காட்டுத்தீயை முற்றாக அழிக்க முடியாமல் போகலாம் என தீயணைக்கும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மரணமான மற்றும் காணாமல் போனவர்களை தேடும் பணி பல குழுக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை பின் இரவு வரையிலான காலப்பகுதியினில், தீ காரணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் காணி முற்றாக அழித்துள்ளதாக இறுதியாக வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.