புகைப்பிடிப்பதற்கு முற்றாக தடை

Tuesday, 20 November 2018 - 13:03

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88
இந்தியாவின் கர்நாடகா மாநிலம் முழுவதும் புகைப்பிடிப்பதற்கான தடை அமலுக்கு வந்துள்ளது.

கர்நாடகத்தில் புகையிலை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பில், நேற்று பெங்களூருவில் ஆலோசனை கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

அந்த கூட்டத்தை தொடர்ந்து, மாநிலத்தின் நகர மேம்பாட்டு துறை அமைச்சர் யு.டி.காதர், ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே குறித்த தடை தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளார்.

பெங்களூரு மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மதுபான விடுதி, உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் ஏலவே புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த தடை உடனடியாக மாநிலம் முழுவதும் அமுல்படுத்தப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், விமான நிலையங்களில் உள்ள வரி அறவிடப்படாத வர்த்தக நிலையங்களில், மதுபானம் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்வது குறித்து மத்திய அரசாங்கத்திற்கு கடிதம் எழுத தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், புகையிலை பொருட்கள், மதுபானம் ஆகியவற்றின் மீதான வரி சலுகையை மீள பெற அரசாங்கம் ஆலோசித்து, தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.