ஒரு இலட்சம் ஏக்கர் பயிர் நிலங்கள் பாதிப்பு

Tuesday, 20 November 2018 - 19:52

+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பயிர் நிலங்கள் களைகளினால் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலனறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலேயே பயிர் நிலங்களுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெரும்போகத்தின் போது பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய களைகளிலிருந்து, பயிர்ச் செய்கையை பாதுகாக்கும் வேலைத்திட்டங்களை விவசாயத்துறை அமைச்சு முன்னெடுத்துள்ளது.

இதேவேளை, விவசாயிகளுக்கு விதை நெல் வழங்குதல் உள்ளிட்ட ஏனைய நடவடிக்கைகளை விவசாய அமைச்சு வழங்கிவருகிறது.

தேசிய உணவு ஊக்குவிப்பு செயற்றிட்டத்தின் கீழ் இந்த உதவிகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.