சந்தையில் சகல அத்தியாவசிய பொருட்களும் போதுமான அளவில்

Wednesday, 21 November 2018 - 19:29

%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B2+%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+
சகல அத்தியாவசிய பொருட்களும் போதுமான அளவு சந்தையில் இருப்பதாக அத்தியாவசிய உணவுப்பொருள் இறக்குமதி மற்றும் விநியோகிக்கும் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

அவற்றின் விலைகளும் சற்று குறைவடைந்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஒரு கிலோ சீனியின் மொத்த விலை 94 ரூபாவாகவும், ஒரு கிலோ பருப்பின் மொத்தவிலை 103-104 ரூபாவாகவும் விற்பனையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காய விலைகளும் சற்று குறைவடைந்துள்ளது.

அத்துடன், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசியும் போதுமான அளவு சந்தைகளுக்கு கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பண்டிகைக்காலத்திற்காக வர்த்தகர்கள் போதுமான அளவு அத்தியாவசியபொருட்களை இறக்குமதி செய்திருப்பதாகவும் அத்தியாசிய உணவுப்பொருள் இறக்குமதி மற்றும் விநியோகிக்கும் வர்த்தக சங்கம் குறிப்பிட்டுள்ளது.