கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நஷ்டயீடு

Wednesday, 21 November 2018 - 20:36

%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81
தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டயீடுகளை பெற்றுக்கொடுக்க தமிழக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக ஆயிரம் கோடி இந்திய ரூபாய்களை ஒதுக்கீடு செய்து தமிழக அரசாங்கம் அரசாணை பிறப்பித்துள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கும், கால்நடை உடமை சேதங்களுக்காக 205.87 கோடி இந்திய ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

வீடுகள் புனரமைப்பிற்கு 100 கோடி ரூபாவும், பயிர் சேதத்துக்கு 300 கோடி ரூபாவும், வீதி, குடிநீர் மற்றும் உள்கட்டமைப்புக்கு 102.05 கோடி ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிற, மீன்வளத்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை நிவர்த்திப்பதற்காக 41.63 கோடிரூபாவும், மின்சாரத்துறை கட்டுமானங்களை மேம்படுத்த 200 கோடி ரூபாவும் என மொத்தமாக 1000 கோடி இந்திய ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.