Hirunews Logo
%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Thursday, 06 December 2018 - 19:06
கைப்பற்றப்பட்டுள்ள பாரிய ஹெரோயின் தொடர்பில் பல தகவல்கள்
1,963

Views

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளின் போது 430 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட காவற்துறை ஊடக பேச்சாளர் காவற்துறை அத்தியட்சகர் ருவண் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

அவற்றின் பெறுமதி 5 ஆயிரத்து 166 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை 37 ஆயிரத்து 304 சந்கேத்துக்குரியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம் பேருவளை கடலில் வைத்து படகுடன் கைப்பற்றப்பட்ட 2 ஆயிரத்து 778 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை நாட்டிற்கு கொண்டு வந்தவர்கள் தொடர்பில் பல தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.

காவற்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர்.

குறித்த ஹெரோயின் போதைப்பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதுடன் அவை சர்வதேச கடற்பரப்பில் வைத்து சிறிய படகொன்றுக்கு பரிமாற்றப்பட்டுள்ளது.

காவற்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவிற்கு கிடைக்க பெற்ற தகவல்களுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த ஹெரோயின் போதைப்பொருளை கரைக்கு கொண்டு வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் 34 மற்றும் 38 வயதுகளை கொண்ட பேருவளை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, கல்கிசை – கல்தேமுல்ல சந்தியில் வைத்து நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்ட லஹிரு சந்தருவன் என்பவர் நாள் ஒன்றுக்கு 500 ஹெரோயின் போதைப் பொருள் பைக்கட்டுக்களை விற்பனை செய்து வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றிரவு 9.20 அளவில் முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசங்களை அணிந்து இரண்டு உந்துருளிகளில் பிரவேசித்த இரண்டு பேர் இந்த துப்பாக்கி சூட்டை நடாத்தியுள்ளனர்.

குறித்த துப்பாக்கி சூட்டை அங்குலானை அஞ்சு என்ற திட்டமிட்ட குற்றங்களை மேற்கொள்ளும் குழு ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்தள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவற்துறை விஷேட அதிரடிப்படையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
672 Views
HiruNews
HiruNews
HiruNews
34,499 Views
HiruNews
HiruNews
HiruNews
14,730 Views
HiruNews
HiruNews
HiruNews
35,916 Views
HiruNews
HiruNews
HiruNews
52 Views
HiruNews
HiruNews
HiruNews
84,174 Views
Top