லிபியாவில் பணயக்கைதிகள் ஆறு பேரை படுகொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதிகள்

Monday, 10 December 2018 - 13:07

%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%90.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
லிபியாவில் கடத்தி பணயக்கைதிகளாக வைத்திருந்த 6 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் லிபியாவின் ஜாப்ரா மாவட்டத்தின் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில் 5 பேர் கொல்லப்பட்டதுடன், தாக்குதலுக்குப் பிறகு 6 பேர் கடத்தி செல்லப்பட்டனர்.

இந்தநிலையில், குறித்த 6 பேரை தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர் என அந்த நாட்டு அதிகாரி உறுதி செய்துள்ளனர்.

இதேவேளை, ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியான பர்பாய் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை ஒன்றில் 10 தலீபான்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் தலீபான்களின் முக்கிய பிரதானி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சூடானின் அல்கடாரி பிரதேசத்தில் தொலை தொடர்பு கோபுரம் ஒன்றின் மீது உலங்கு வானூர்தி மோதி இடம்பெற்ற விபத்தில் 5 பேர் பலியாகினர்.

இந்த சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.