கொக்குத்தொடுவாயில் தொடர்ந்து சிக்கும் வெடிபொருட்கள் - படங்கள்

Monday, 10 December 2018 - 14:50

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதியில் அபாயகரமான வெடிபொருட்கள் மண்ணில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொக்குத்தொடுவாய் வடக்கில் உள்ள தனியார் வீட்டு வளாகத்தில் இருந்து நேற்று இந்த அபாயகரமான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கொக்குத்தொடுவாய் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்ட காவல்துறையினர், குறித்த வெடிபொருட்களை பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றுவதற்காக நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் நீதிமன்றத்தின் அனுமதி கிடைக்கும் வரை குறித்த பகுதியில் காவல்துறையினரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, 15 கிலோகிராம் எடைகொண்ட வெடிப்பொருள் ஒன்று கொக்குத்தொடுவாய் மத்தி பகுதி தனியார் காணி ஒன்றில் இருந்து நேற்று மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.