ஆமீனிய நாடாளுமன்ற தேர்தலில் பதில் பிரதமரின் கட்சி வெற்றி

Monday, 10 December 2018 - 19:35

%E0%AE%86%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
ஆமீனிய நாடாளுமன்ற தேர்தலில் பதில் பிரதமரான நிக்கோல் பஷின்யனின் கட்சி பாரிய வெற்றியை பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற இந்த தேர்தலில் 49 சத வீதமான வாக்காளர்களே வாக்களித்திருந்தனர்.

அவர்களில் 70 சத வீதமானவர்கள் பதில் பிரதமருக்கே தமது வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

43 வயதான நிக்கோல் பஷின்யன் முன்னாள் ஊடகவியலாளர் என்பதுடன், ஆமீனியாவில் இடம்பெறும் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக அமைதியான போராட்டம் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக வாக்குகளை பெறுவதற்காக வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு கையூட்டல் வழங்கி வந்தமை பொதுவான விடயம் என கருதப்படுகிறது.

இருப்பினும், நடைபெற்ற தேர்தலில் அதிக அளவிலான ஊழல் இடம்பெறவில்லை என தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு உட்பட பல தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் இந்த முறை தேர்தலினை கண்காணித்துள்ளதுடன், தேர்தல் நடந்தமை குறித்து தமது திருப்தியை வெளியிட்டுள்ளனர்.