ஜேர்மன் தொடரூந்து பணியாளர்கள் பணி தவிர்ப்பு போராட்டம்

Monday, 10 December 2018 - 19:41

%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
ஜேர்மன் தொடரூந்து பணியாளர்கள் மேற்கொண்ட பணி தவிர்ப்பு போராட்டம் காரணமாக பெரும்பாலான சேவைகள் பாதிப்படைந்துள்ளன.

வேதன உயர்வு கோரி, பணியாளர்கள் மேற்கொண்ட திடீர் பணி தவிர்ப்பினால் பல லட்ச கணக்கான பயணிகள் தமது பயணத்தை தொடர முடியாது சிரமப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நகரங்களுக்கு இடையேயான கடுகதி சேவை, நகர சேவைகள் இடம்பெறாத நிலையில், மீள அறிவித்தல் வரை சேவைகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் பேலினில் மாற்று பயண ஒழுங்கினை மேற்கொள்ளுமாறு பயணிகளுக்கு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

குறுகிய தூர சேவை, பயணிகள் பேருந்து மற்றும் ட்ராம் கார் சேவைகளை பயன்படுத்துமாறு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நேற்று தொழில் சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் இந்த பணி தவிர்ப்பு போராட்டம் இன்று ஆரம்பமாகியது.

7.5 சத வீத வேதன உயர்வு வழங்கப்பட வேண்டும் என ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஊழியர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

பணியாளர்களின் கோரிக்கை நியாயமற்றது என தெரிவித்துள்ள ஜேமன் அரசாங்கம், ஏற்கனவே இவர்களுக்கு சிறந்த வேதன உயர்வு அண்மைக்காலத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, பணி தவிர்ப்பு போராட்டத்தை நிறைவிற்கு கொண்டு வரும் நோக்கில், அரச அதிகாரிகள் தொழில் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.