ஜனாதிபதி செயலகத்தில் இன்றிரவு 7 மணிக்கு...

Tuesday, 11 December 2018 - 12:59

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+7+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81...
ஜனாதிபதியின் அழைப்புக்கு அமைய இன்று, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டம் ஒன்று இன்று இரவு 7 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டப்ளியூ.டி.ஜே செனவிரத்ன எமது செய்தி பிரிவிடம் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் கூட்டமைப்பாக போட்டியிட சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன முன்னணி என்பன இணக்கத்திற்கு வந்துள்ளன.

அதற்கமைய, சில மாட்டங்களில் கூட்டமைப்பாகவும் சில மாவட்டங்களில் தனித்தனியாகவும் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பொதுஜன முன்னணியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் இன்றைய தினம் கட்சியின் தலைமையகத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது