சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனடாவின் முன்னாள் இராஜதந்திரி

Thursday, 13 December 2018 - 13:22

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF
சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது முன்னாள் இராஜதந்திரி குறித்து தூதரக மட்டத்தில் அணுகுமுறையை எதிர்ப்பார்ப்பதாக கனடா தெரிவித்துள்ளது.

கனடாவின் முன்னாள் இராஜதந்திரியான மைக்கேல் கொவ்ரிக் கடந்த திங்கட்கிழமை பீஜிங் தேசிய பாதுகாப்பு பணியத்தினரால் தடுத்து வைக்கப்பட்டார்.

எனினும், அவரைத் தடுத்து வைத்திருப்பதற்கான காரணம் தெளிவாக அறிவிக்கப்படவில்லை என்றும், அவர் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதையும் தாம் அறியவில்லை என்றும் கனேடிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த விடயத்தை சீன அதிகாரிகளுடன் நேரடியாக கையாள உள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைவ்வர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தெரிவித்துள்ளார்.

சீனாவின் தொலைத்தொடர்பு நிறுவன பிரதானியான மெங் வான்ஜே கனடாவில் கைதுசெய்யப்படட நிலையில், இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.