கூட்டு ஒப்பந்த பேச்சுவார்தை குறித்து ஏற்பட்டுள்ள குழப்பம்

Thursday, 13 December 2018 - 19:44

%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக, முதலாளிமார் சம்மேளனத்திடம் இருந்து தொழிற்சங்கங்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 16ம் திகதி கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.

இதுதொடர்பில் நேற்று கொட்டகலையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், முதலாளிமார் சம்மேளனத்திடம் இருந்து தங்களுக்கு அழைப்புக் கிடைத்திருப்பதாக கூறினார்.

ஆனால் அச்சுறுத்தல்கள் காரணமாக தாங்கள் நேரடியாக தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று முதலாளிமார் சம்மேளனம் கடந்த தினம் கொழும்பில் ஊடக சந்திப்பை நடத்தி அறிவித்திருந்தது.

இதனை ஆறுமுகம் தொண்டமான் மறுத்ததுடன், 16ம் திகதி தங்களை முதலாளிமார் சம்மேளனம் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாக குறிப்பிட்டார்.

ஆனால் 16ம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் முதலாளிமார் சம்மேளனம் கலந்து கொள்ளாது என்றும், மாறாக இலங்கைத் தொழில் வழங்குனர் சம்மேளனமே கலந்துக் கொள்ளும் என்றும் அதன் ஆலோசகர் ஸ்ரீகுமார் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

மேலும் 16ம் திகதி பேச்சுவார்த்தைக்கு இலங்கை தொழில் வழங்குனர் சம்மேளனத்தின் கடிதத் தலைப்பின் ஊடாகவே தொழிற்சங்கங்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.