தென்னை பயிர்ச்செய்கை சபையால் பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு

Friday, 14 December 2018 - 6:26

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்னை பயிர்ச்செய்கை சபையினால் வழங்கப்பட்ட மானியத் திட்டங்களுக்கான பயனாளிகளுக்குரிய காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று தென்னை பயிர்ச்செய்கை சபையின் வடபிராந்திய முகாமையாளர் வைகுந்தன் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது

குறித்த மாணியத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள 320 பயனாளிகளில் 51 பேருக்கான காசோலைகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டதோடு, 120 பேருக்கு ஊடுபயிர் மேற்கொள்வதற்கான விதைகள் பசளைகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டது

தென்னை பயிர்ச்செய்கை சபையின் வடபிராந்திய முகாமையாளர் வைகுந்தன் தலைமையில்  இடம்பெற்ற இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கோ.தனபாலசுந்தரம் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ் கெளரிதிலகன் மாவட்ட விவசாய பணிப்பாளர் திரு ரா கோகுலதாசன் தென்னை பயிர்ச்செய்கை சபையின் பண்ணை திட்டமிடல் உத்தியோகத்தர்  ஈ.சற்குணன் உள்ளிட்டவர்கள் அதிதிகளாக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு காசோலைகள் உரமானியம் ஆகியவற்றை வழங்கிவைத்தனர்.