ஃப்ரான்ஸில் துப்பாக்கித் தாக்குதலை நடத்தியவர் சுட்டுக் கொலை

Friday, 14 December 2018 - 9:50

%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88
ஃப்ரான்சின் ட்ராஸ்போர்கில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடத்தியவர் அந்த நாட்டின் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த செவ்வாய் கிழமை காலை கிறிஸ்மஸ் சந்தை ஒன்றில் அவரால் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 3 பேர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் வரையில் காயமடைந்தனர்.

தாக்குதல் நடத்தியவர் தொடர்ந்து தேடப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் மறைந்திருந்த பகுதியை காவற்துறையினர் சுற்றிவளைத்தப் போது, அவர் துப்பாக்கித் தாக்குதலை நடத்தியதாகவும், அதன்போது காவற்துறையினரும் அவரை சுட்டதாகவும் ஃப்ரான்ஸ் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.