சமாதான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் திட்டத்திற்கு ஈரான் வரவேற்பு

Friday, 14 December 2018 - 19:56

%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
யேமனில் இடம்பெறும் யுத்தத்திற்கு காரணமான தரப்பினர், ஸ்வீடனில் சமாதான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் திட்டத்தினை ஈரான் வரவேற்றுள்ளது.

இந்த சமாதான நடவடிக்கைகளில் ஈரானின் ஒத்துழைப்பு அமைப்பான ஹவுத்தி குழுவினரும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளதாக ஈரானிய தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது, ஈரான் மற்றும் சவுதி அரேபியா சார்பாக யேமனில் செயல்படும் தரப்பினர் இணக்கப்பாடொன்றை எட்டியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இரு தரப்பினரும் யேமனில் உள்ள முக்கிய துறைமுக நகரமான ஹூதைதா நகரத்தில் இருந்து ஆயுததாரிகள் வெளியேற வேண்டும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து வருடங்களாக யேமனில் இடம்பெற்றுவரும் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்த பேச்சுவார்த்தைகள் சுவீடனில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது