உயர்நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி அல்ல - ஜே.வி.பி

Friday, 14 December 2018 - 20:07

%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+-+%E0%AE%9C%E0%AF%87.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF
உயர்நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி அல்ல என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கட்சியின் பிரசார செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு ஜனநாயகம் தொடர்பான வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்ப்பாகும்.

இதனை ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியாகவோ அல்லது ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியாகவோ குறிப்பிட முடியாது.

ஏனெனில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் இந்த சூழ்ச்சிக்கு பங்களிப்பு செய்துள்ளனர்.

எனவே, இதனை எவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி எனக் கூறுவது என விஜித்த ஹேரத் கேள்வி எழுப்பியுள்ளார்.

உயர்நீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.