அணுசக்தி குறித்த ஒப்பந்தத்தை பாதுகாக்கும் நோக்கில் செயற்பட ரஷ்யா தயார்

Friday, 14 December 2018 - 19:58

%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
நடுத்தர அணுசக்தி குறித்த ஒப்பந்தத்தை பாதுகாக்கும் நோக்கில் செயற்பட ரஷ்யா தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, இந்த ஒப்பந்தத்தை மேலும் வலுவாக்க முடியும் என ரஷ்ய வெளிவிவகாரத்துறை இன்று தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இரு நாட்டு உயர்மட்ட அதிகாரிகளும் இணைந்து நடுத்தர அணு ஆயுத உற்பத்தி இடங்களை கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரஷ்யா தமது 9எம்729 அணு ஆயுத பலத்தை முற்றாக கைவிட வேண்டும் என கடந்த வாரம் வொஷிங்டன் வலியுறுத்தியிருந்தது.

காலக்கெடு விதிக்கப்பட்ட 60 நாள் காலப்பகுதியில் மொஸ்கோ இதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்தத் தவறும்பட்சத்தில் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறப்போவதாகவும் எச்சரித்திருந்ததென்பது குறிப்பிடத்தக்கது.