கோவில் பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதா? - 11 பேர் பலி!!

Saturday, 15 December 2018 - 9:59

%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%3F+-+11+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21%21
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு கோயில் திருவிழாவில் பிரசாதம் விஷமானதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாம்ராஜ் மாவட்டம், கெனூரில் உள்ள அம்மன் கோயில் திருவிழா  தொடர்பாக இருபிரிவினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில்,  கோவில்  திருவிழா நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது போது வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட நான்கு பேர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

மேலும் 70-க்கும் அதிகமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பில் இருவர் தற்போதைய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.