ரணில் விக்ரமசிங்க நாளை பிரதமராக சத்தியப்பிரமாணம்

Saturday, 15 December 2018 - 18:54

%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை காலை 10.30க்கு புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு நாளை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதுடன், 30 பேர் கொண்ட அமைச்சரவை நாளை மறுதினம் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் பங்குதாரர்களாக இருந்த ஒரு தரப்பினர் அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ளனர்.

அவர்களில் இருந்து யாரேனும் நிபந்தனைகள் இன்றி தங்களுடன் இணைந்துகொள்ள விரும்பினால் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.

அவ்வாறு நாளை மறுதினம் உருவாக்கப்படுகின்ற அரசாங்கம் ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கமாகவே இருக்கும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் எந்த உடன்பாடுகளும் இல்லை.

ஜனநாயகத்தை மீட்பதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளித்தது.

எவ்வாறெனினும், வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எனினும், அது குறித்து எந்த உடன்பாடுகளோ நிபந்தனைகளோ விதிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதியுடனும் தங்களுக்கு எந்த உடன்பாடுகளும் எட்டப்படவில்லையென அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, லேக்ஹவுஸ் கட்டிடத்தின் முன்பாக அண்மையில் இடம்பெற்ற அமைதியற்ற நிலையை தாங்கள் கண்டிப்பதாகவும், அவ்வாறு செயல்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம், முறையற்ற வகையில் செயல்படுவதற்காக தாங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவில்லையென்றும் குறிப்பிட்டார்.