இஸ்ரெய்லின் தலைநகராக மேற்கு ஜெரூசலேம் அமைவதற்கு அவுஸ்திரேலியா அங்கீகாரம்

Saturday, 15 December 2018 - 19:28

%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
இஸ்ரெய்லின் தலைநகராக மேற்கு ஜெரூசலேம் அமைவதனை அவுஸ்திரேலியா அங்கிகரிப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் (Scott Morrison) அறிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும், இஸ்ரேலிய தலைநகர் குறித்த சர்ச்சை சுமூகமாக தீர்க்கப்படும்வரை, இஸ்ரேலுக்கான அவுஸ்திரேலிய தூதுவராலயம் டெல் அவீவிலேயே செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாலஸ்தீனிய மக்களின் அபிலாசைகளுக்கும் அவுஸ்திரேலியா மதிப்பளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலத்தில் தலைநகர் மாற்றப்பட்டது குறித்து பாலஸ்தீனிய மற்றும் இஸ்ரேல் தரப்பினருக்கு இடையே தொடர்ந்தும் வாதப்பிரிதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதுதவிர, மத்திய கிழக்கு பிராந்திய நாடுகளில் திறந்த ஜனநாயக முறைமைக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்தும் ஆதரவினை தெரிவித்துவரும் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.