தொடர்ந்து மாற்றங்களை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி

Sunday, 16 December 2018 - 9:34

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D++%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF
அமெரிக்க நிர்வாகத்தின் உயர் பதவிகளில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றார்.
 
இந்த நிலையில், அமெரிக்க உள்துறை செயலாளான ரயன் ஸின்கே  தமது பதவியிலிருந்த இந்த ஆண்டு இறுதியில் விலகுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
 
தமது ட்விட்டர் தளத்தில் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ள அவர்,  புதிய உள்துறை செயலாளரை அடுத்தவாரம் நியமிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, அமெரிக்க முகாமைத்துவ மற்றும் பாதீட்டு அலுவலக இயக்குநரான மைக் முல்வனேவை வெள்ளை மாளிகையின் பதில் தலைமை அதிகாரியாக டொனால்ட் ட்ரம்ப் நேற்றைய தினம் நியமித்துள்ளார்.
 
வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியான ஜெனரல் ஜோன் கெலி  இந்த ஆண்டின் இறுதியில் குறித்த பதவியிலிருந்து விலகவுள்ள உள்ள நிலையில், இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.