சர்வதேச போதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்பு

Sunday, 16 December 2018 - 12:54

+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
388 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பங்களாதேசை சேர்ந்த பெண், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்பு கொண்டவர் என்பது ஆரம்ப விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
 
இதற்கு அமைய அவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

388 மில்லியன் ரூபா பெறுமதியான 32கிலோ 329 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பங்களாதேஷ் பெண் ஒருவர் தெஹிவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

23 வயதுடைய குறித்த பெண் கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து ரத்மலானையில் உள்ள வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளார்.

பல தடவைகள் பங்களாதேஷிற்கு பயணம் செய்துள்ள குறித்த பெண் இலங்கையில், மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் வர்த்தகத்தில் முக்கிய பங்காளியா செயல்படுவது குறித்த சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.