நிதி ஒதுக்கத்திற்கான யோசனை..

Sunday, 16 December 2018 - 12:56

+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88..
அடுத்த வருடத்திற்கான பாதீடு சமர்ப்பிப்பதற்கு முன்னர் இரண்டு மாதத்திற்கான இடைக்கால நிதி ஒதுக்கத்திற்கான யோசனை ஒன்று சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டீ சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
 
அரச துறையினருக்கான வேதன கொடுப்பனவுகள், அவசரமாக மேற்கொள்ள வேண்டிய கொள்வனவுகள் மற்றும் எரிபொருள் இறக்குமதி போன்ற விடயங்களுக்காக இது பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
இது தவிர, வெளிநாட்டு கடன் கொடுப்பனவுகளும் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த இடைக்கால நிதி ஒதுக்கம் எதிர்வரும் 26ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்மொழியப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியினில் முழு அளவிலான பாதீட்டை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இல்லை என ஐக்கிய தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.
 
ஏனெனில், முழு அளவிலான பாதீடு குறித்த விவாதம் 29 நாட்கள் இடம்பெற வேண்டும் என்பதனாலேயே இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்படுகிறது.
 
அதேவேளை, ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஹர்ஷா டீ சில்வா, தெரிவித்துள்ளார்.
 
இந்த செயல்பாடுகள் அடுத்த ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் என்று  அவர் குறிப்பிட்டுள்ளார்.