7.1 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி

Sunday, 16 December 2018 - 13:22

7.1+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
இந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் 7.1 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த உற்பத்தி ஒரு சாதனையாக கருதப்படுகிறது.
 
ஒக்டோபர் மாத உற்பத்தியானது, தேயிலை துறையை சேர்ந்தவர்களினால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு முயற்சி என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதற்கு முன்னர் 2002 ஆம் ஆண்டில் குறிப்பிட்ட ஒரு மாதத்தில் 7.5 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது.
 
மலையகத்தில் தேயிலை உற்பத்திக்கு ஏற்ற மழைவீழ்ச்சி மற்றும் சாதகமான காலநிலை காரணமாகவே உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேவேளை, தேயிலை உற்பத்தியில் நேரடியாக ஈடுபட்டுள்ளோருக்கான வேதன கட்டமைப்பு 150 வருட கால தன்மையை கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.