இரண்டாம்நாள் ஆட்டம் இன்று..

Sunday, 16 December 2018 - 13:26

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81..
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டம் இன்று முடிவடைந்துள்ளது.
 
போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து அணி, இன்றைய ஆட்டநேர முடிவில், 2 விக்கட்டுக்களை இழந்து 311 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
 
முன்னதாக இலங்கை அணி, தமது முதலாவது இன்னிங்ஸில் 282 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
 
இதேவேளை, இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்ற வருகின்றது.
 
போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலிய அணி, சற்று முன்னர் வரை  02 விக்கட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
 
முன்னதாக அவுஸ்திரேலிய அணி, தமது முதலாவது இன்னிங்ஸில் 326 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
 
இதேவேளை, இந்திய அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 283 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
 
இந்தப் போட்டியில் இந்திய அணித் தலைவர் விராட் கோலி, 123 ஓட்டங்களைப் பெற்றார்.
 
இதனூடாக டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 25 சதங்களை கடந்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
 
68 இன்னிங்ஸ்களில் 25 சதகங்களைப் பெற்ற அவுஸ்திரேலியாவின் டொன் ப்ரட்மன் குறித்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
 
இந்த நிலையில், 127 இன்னிங்ல்ஸி 25 சதங்களைக் கடந்த விராட் கோலி இரண்டாம் இடத்தை தனதாக்கியுள்ளார்.
 
130 இன்னிங்ஸ்களில் 25 சதங்களைப் பெற்ற இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுள்கர் இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.