புதிய பிரதமர் ரணில் பதவியேற்ற பின்னர் விடுத்த விசேட செய்தி..!

Sunday, 16 December 2018 - 13:52

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..%21
நாட்டை சுமூக நிலைமைக்கு கொண்டுசெல்ல, அபிவிருத்திகளை ஆரம்பிப்பதே தமது முதல்கட்ட செயல்பாடு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமராக பதவி ஏற்றதன் பின்னர், அலரி மாளிகையில் வைத்து நாட்டு மக்களுக்கு ஆற்றி விசேட உரையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

தங்களது அரசாங்கம், முன்னெடுத்த அபிவிருத்தி பணிகள் கடந்த சில வாரங்களாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

நாட்டுக்கு அபிவிருத்தியை பெற்றுக் கொடுப்பதற்கே தாங்கள் அர்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த பிரதமர், கடந்த 3 வருடங்களாக துன்பங்களை அனுபவித்த மக்களுக்கு, சலுகைகளை பெற்றுக் கொடுப்பதற்கு முன்வந்த காலகட்டத்திலேயே, நெருக்கடி நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையின் நாடாளுமன்றமும், நீதித்துறை கட்டமைப்பும் சட்டவிதிமுறைகளுக்கு அமைய செயற்படுவதை ஒட்டி தாம் மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாநாயகத்தை பாதுகாக்க குரல் கொடுத்த அனைவருக்கும் தமது நன்றிகளையும் அவர் இதன்போது வெளியிட்டார்.

இதேவேளை, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று தாங்கள் பெற்றுக் கொண்ட வெற்றி தமது வெற்றியோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியினது வெற்றியோ அல்ல.

இந்த வெற்றியானது, ஜனநாயகத்திற்கும் மக்கள் இறைமைக்கும் கிடைத்த வெற்றி என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.  
 
இலங் கையின் ஜனநாயக சோசலிஷ குடியரசின் 23ஆவது பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று சத்தியபிரமாணம் செய்துக் கொண்டார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 11.16 அளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
 
ரணில் விக்ரமசிங்க 1993ஆம் ஆண்டுமுதல் 1994ஆம் ஆண்டுவரையும், பின்னர், 2001 முதல் 2004 ஆம் ஆண்டுவரையும் பிரதமராக பதவி வகித்தார்.
 
இதையடுத்து, கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மீண்டும் பிரதமராக சத்தியபிரமாணம் மேற்கொண்டார்.
 
இதனையடுத்து, 2015ஆம் ஆண்டின் ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பின்னர் மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.
 
எனினும், கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் அவர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியதித்தார்.

இந்த நிலையில், நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகியதையடுத்து, மீண்டும் இன்றைய தினம் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ளார்.

இதற்கமைய தற்போது, ரணில் விக்ரமசிங்க 5ஆவது தடவையாக இன்று பிரதமராக பதவியேற்றுள்ளார்.

இன்று முற்பகல் 11 மணியளவில் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி செயலகத்திற்கு பிரசன்னமானார்.

இதற்கு சில நிமிடங்களின் பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதி செயலகத்திற்கு வருவகைத் தந்தார்.