பள்ளிவாசல் ஒன்றை தாக்கி அழித்த அமெரிக்க படை

Sunday, 16 December 2018 - 16:12

%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88
அமெரிக்க தலைமையிலான கூட்டு படையணியினர் சிரியாவின் ஹஜின் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றை தாக்கி அழித்துள்ளனர்.

அந்த பள்ளிவாசல் ஐ.எஸ்.ஐ.எஸ். இன் கண்காணிப்பு கட்டுப்பாட்டு நிலையமாக செயல்பட்டு வந்ததாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

சிரியாவின் இயுபரேட்  நதிக்கு கிழக்கே உள்ள இந்த நகரம், ஐ.எஸ்.ஐ.எஸ். இன் இறுதி கோட்டையாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல மாதங்களாக திட்டமிடப்பட்ட நிலையிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்கப்பட்ட பள்ளிவாசலின் அடித்தளத்தில் செயல்பட்ட பாரிய ஆயுதங்கள் தரித்த 16 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.