கிழக்கு பகுதியினை அபிவிருத்தி செய்ய அனுமதி வழங்க வேண்டும்

Sunday, 16 December 2018 - 19:59

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை துறைமுக அதிகார சபை, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியினை அபிவிருத்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என இலங்கை கப்பல் முகவர்கள் சங்கம் கோரியுள்ளது.
 
2018ஆம் ஆண்டு, முதல் அரையாண்டு பகுதியில் இலங்கை துறைமுக அதிகார சபையும் கொழும்பு துறைமுக அதிகாரிகளும் கொழும்பு துறைமுகத்தை துரித கதியில் செயல்படும் துறைமுகமாக மாற்றியுள்ளதாக அந்த சங்கம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
 
துறைமுக நடவடிக்கைகள் பொதுவாக முன்னேற்றம் கிழக்கு துறைமுக பிராந்தியம் மேம்படுத்தப்பட வேண்டும் என இலங்கை கப்பல் முகவர்கள் சங்கத்தின் தலைவர் இக்ரம் குட்டிலான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த வருடத்தில் சுமார் 7 மில்லியன் கொள்கலன்கள் கையாளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த எண்ணிக்கையிலான கொள்கலன்களை சிங்கபூர், துபாய் போன்ற துறைமுகங்கள் கையாள்கின்றன.