03 விக்கட்களை இழந்து 12 ஓட்டங்கள்

Monday, 17 December 2018 - 10:39

03+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+12+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
இலங்கை அணிக்கும் நியுசிலாந்து அணிக்கும் இடையில் வெலின்டனில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி முதல் இனிங்சில் சகல விக்கட்களையும் இழந்து 578 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

டொம் லெதம் ஆட்டமிழக்காமல் 264 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் 91 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

இலங்கை அணி முதல் இனிங்சில் 282 ஒட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், 296 ஓட்டங்களினால் நியுசிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

பந்து வீச்சில் லஹிரு குமார 04 விக்கட்களை கைப்பற்றினார்.

இந்நிலையில் தனது இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 03 விக்கட்களை இழந்து 12 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.