உயரதிகாரிகள் மீது தடை

Monday, 17 December 2018 - 13:47

%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88
வடகொரியாவின் அமைச்சர் ஒருவர் மற்றும் அந்தநாட்டைச் சேர்ந்த இரண்டு உயரதிகாரிகள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
 
இவர்களில் ஒருவர் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்-னுக்கு நெருக்கமானவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளிவிவகாரதுறை தயாரித்த ஓர் அறிக்கையில் குறித்த 3 பேர் மீதும், மனித உரிமை மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கையை எடுப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதன்படி, வடகொரிய ஜனாதிபதியின் வலதுகரமாக செயல்படும் சோ-ரியோங்-ஹே, வட கொரிய பாதுகாப்பு அமைச்சர் ஜோங் க்யோங்-தாயெக் (துழபெ முலழபெ-வாயநம) தகவல் பரப்பல் துறை அலுவலர் பாக் க்வாங்-ஹோ ஆகிய மூவர் தொடர்பிலேயே தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அவர்களின் அமெரிக்க சொத்துகளைப் பறிமுதல் செய்யப்போவதாகவம் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
 
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில், அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான தீர்மானத்தில், பின்னடைவு ஏற்படும் என்று வடகொரியா எச்சரித்துள்ளது.

அண்மையில், அமெரிக்க - வடகொரிய தலைவர்களுக்கு இடையே, சிங்கப்பூரில் நடந்த நேரடிப் பேச்சுவார்த்தை இரு நாடுகளின் உறவில் புதிய பாதையின் ஆரம்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதனை தொடர்ந்து வடகொரியா மேற்கொண்ட சில நடவடிக்கைகள் இரு நாட்டு உறவில் பதற்றத்தைத் தணிப்பதாக இருந்தன.
 
இரு நாட்டுத் தலைவர்களிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கும் என்று கூறப்பட்ட போதிலும், அந்தப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு அவசரம் ஏதும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.