விளையாட்டரங்கில் திடீர் என செய்த காரியம்..!!

Tuesday, 18 December 2018 - 10:58

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D..%21%21
இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிக்கு இடையில் இடம்பெற்று வரும் டெஸ்ட் போட்டியில் அன்ஜலோ மெத்தீவ்ஸ் தனது 09 வது சதத்தினைபூர்த்தி செய்தார்.

249 பந்துகளை எதிர்கொண்டு சதத்தினை பூர்த்தி செய்தார்.

சதத்தினை பூர்த்தி செய்த பின்னர் மெத்தீவ்ஸ் தனது உடல் தகுதி நன்றாக உள்ளதாக சகலருக்கும் நினைவுப்படுத்துவது போன்று விளையாட்டரங்கில் உடற் பயிற்சி செய்து காட்டியமை குறிப்பிடத்தக்கது.

மெத்தீவ்ஸ் இறுதியாக 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, குசல் மென்டிஸ் தனது 06 வது சத்தினை பூர்த்தி செய்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி முதல் இனிங்சில் சகல விக்கட்களையும் இழந்து 282 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

நியுசிலாந்து அணி முதல் இனிங்சில் சகல விக்கட்களையும் இழந்து 578 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.