புதிய அமைச்சரவை நாளைய தினம்

Tuesday, 18 December 2018 - 12:41

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
புதிய அமைச்சரவை பெரும்பாலும் நாளைய தினம் சத்திய பிரமாணம் செய்துக் கொள்ளும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, அமைச்சர்களின் விபரங்கள் குறித்த பட்டியல் இன்றைய தினம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக, ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் எமது செய்தி சேவையிடம் தெரிவித்தார்.

அரசியல் அமைப்பின் 19ஆம் திருத்தத்திற்கு அமைய பாதுகாப்பு அமைச்சு, சுற்றாடல் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சு என்பவற்றையே ஜனாதிபதி வைத்திருக்க முடியும் எனவும்,
 
தற்போது ஜனாதிபதியிடம் உள்ள சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சுக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் இரு உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை 30 பேராக மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவை அல்லாத அமைச்சு பதவிகள் சிலவற்றை வழங்கவும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், அமைச்சரவையின் பெயர் பட்டியலை ஜனாதிபதி அனுமதித்த பின்னரே அமைச்சர்கள் சத்திய பிரமாணம் செய்துக் கொள்வர் என ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.