30க்கு மேல் அதிகரிக்குமாயின் நடவடிக்கை

Tuesday, 18 December 2018 - 13:46

30%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 30க்கு மேல் அதிகரிக்குமாயின் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜே.வி.பி எச்சரித்துள்ளது.
 
ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை எமது செய்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார்.
 
அவ்வாறு இடம்பெற்றால், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை விலக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்தை மாற்றியமைக்க முடிந்த தம்மால், நிறைவேற்று அதிகாரம் இல்லாத, கட்சியில் இணக்கம் இல்லாத பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, அவர் உரிய முறையில் செயற்பாடாது விட்டால் பதவியில் இருந்து விலக்கவும் முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.