மனோ கணேசன், றிசாட் பதியூதீன் மற்றும் மலிக் சமரவிக்ரமவின் அதிரடி தீர்மானம்

Tuesday, 18 December 2018 - 19:02

%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%2C+%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் தலைவர்களான மனோ கணேசன், றிசாட் பதியூதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பொறுப்புக்களை ஏற்காதிருக்க தீர்மானித்துள்ளனர்.
 
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று ஆளும் கட்சியின் கூட்டம் இடம்பெற்றது.
 
இந்த கூட்டத்தின் போது தாங்கள் இந்த விடயத்தை பிரதமரிடம் தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
 
19வது அரசியலமைப்புக்கமைய அமைச்சரவை 30 பேருக்குள் உட்பட்டிருக்க வேண்டும்.
 
இந்தநிலையில், தன்னிச்சையாக முன்வந்து அமைச்சரவை அந்தஸ்துள்ள பொறுப்புக்களை ஏற்காதிருக்க எவரேனும் முன்வருமாறு பிரதமர் முன்னாள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களை கோரியுள்ளார்.
 
இதன்போதே முன்னாள் அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் ரிசாட் பதியூதீன் ஆகியோர் இதனை தெரிவித்துள்ளனர்.