Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Friday, 11 January 2019 - 13:06
புதிய அரசியல் யாப்பு தொடர்பான நிபுணர்கள் குழு அறிக்கை அரசியலமைப்பு பேரவையில் முன்வைப்பு
61

Views
புதிய அரசியல் யாப்பு தொடர்பான நிபுணர்கள் குழு அறிக்கை இன்று முற்பகல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அரசியலமைப்பு பேரவையில் முன்வைக்கப்பட்டது.

புதிய யாப்பு தொடர்பிலான நிபுணத்துவ அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக, அரசியல் யாப்பு வழிநடத்தல் குழுவினால் விசேட நிபுணர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த குழுவின் அறிக்கையே இன்றையதினம் முன்வைக்கபட்டுள்ளது.

இதனை முன்வைத்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புதிய அரசியல்யாப்பு சட்டமூலத்தை கொண்டு வருவதற்கு பதிலாக இந்த அறிக்கையை முன்வைப்பதன் நோக்கம் நாடாளுமன்றில் புதிய யாப்பிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பதனாலாகும் என குறிப்பிட்டார்.

நாடு பிளவுப்படும் என்று கூறப்பட்ட போதிலும் அது தொடர்பான எந்தவித விடயங்களும் இந்த அறிக்கையில் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து உரையாற்றிய எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ, புதிய அரசியலமைப்பை கொண்டு வர இந்த நாடாளுமன்றம் ஏற்புடையதல்ல என குறிப்பிட்டார்.

எனவே பொதுத் தேர்தல் ஒன்றுக்கு செல்வோம் எனவும் புதிய அரசியலமைப்பு தொடர்பான இரண்டு தரப்பு யோசனைகளையும் மக்கள் முன் முன்வைத்து புதிய நாடாளுமன்றில் இது குறித்து தீர்மானிப்போம் என்றும் கூறினார்.

இதனையடுத்து, உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், புதிய அரசியலமைப்பை கொண்டுவர பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டுமென கூறப்படுவது சட்டத்திற்கு முரணானது என சுட்டிக்காட்டினார்.

புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றில் அனுமதிக்கப்பட்டு சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும்.

அப்போது அனைத்து இன மக்களும் அதற்கு தமது அபிப்பிராயங்களை முன்வைப்பார்கள்.

இந்தநிலையில் தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டுமென கூறுவது அநீதியானதாகும்.

இந்த புதிய அரசியலமைப்பு ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீராத பட்சத்தில் அல்லது புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படாத பட்சத்தில் நாடு ஒரு இக்கட்டான நிலைக்கு செல்லும் எனவும் இரா.சம்பந்தன் எச்சரித்தார்.

இதனையடுத்து உரையாற்றிய ஜே.வீ.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, 3 வருடங்களாக முயற்சித்தும் அரசியல்யாப்பு வரைவை சமர்பிக்க முடியாத நிலை நிலவுகின்றமை வருத்தமளிப்பதாக குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழு 83 அமர்வுகளை நடத்தினாலும் எந்தவித இணக்கப்பாடும் ஏற்படவில்லை

மறுபுறத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இது தொடர்பில் தவறான பிரசாரத்தை பரப்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,533 Views
HiruNews
HiruNews
HiruNews
13,343 Views
HiruNews
HiruNews
HiruNews
9,585 Views
HiruNews
HiruNews
HiruNews
25,634 Views
HiruNews
HiruNews
HiruNews
138 Views
HiruNews
HiruNews
HiruNews
59,998 Views
Top