Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
Friday, 11 January 2019 - 15:22
அர்ஜுனவின் மெய்ப்பாதுகாவலர் மீண்டும் விளக்கமறியலில்
180

Views
கனியவள கூட்டுத்தாபன வளாகத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரி எதிர்வரும் 18ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் இன்று பிரசன்னபடுத்தப்பட்டபோதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், சந்தேகத்துக்குரியவர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட பிணை அனுமதி கோரிக்கை தொடர்பில் குறித்த தினத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பிப்பதாகவும் நீதவான் அறிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி, அப்போதைய கனியவள அமைச்சராக செயற்பட்ட அர்ஜுன ரணதுங்க, சில எழுத்து ஆவணங்களை கொண்டுசெல்வதற்காக கனியவள கூட்டுத்தாபனத்திற்கு பிரசன்னமானதுடன் அங்கு கூடியிருந்தவர்களுக்கு மத்தியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

இதன்போது, கனியவள முன்னாள் அமைச்சரின் பாதுகாவலர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் மூவர் காயமடைந்தனர்.

அவர்களுள், கம்பளை - கெலிஓய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில், உயிரிழந்தார்.
 
குறித்த சம்பவம் கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகரசபை உறுப்பினர் எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,808 Views
HiruNews
HiruNews
HiruNews
56,296 Views
HiruNews
HiruNews
HiruNews
21,568 Views
HiruNews
HiruNews
HiruNews
46,887 Views
HiruNews
HiruNews
HiruNews
1,267 Views
HiruNews
HiruNews
HiruNews
106,024 Views
Top