கும்பமேளா புனித நிகழ்வில் 12 கோடி பக்தர்கள்

Monday, 14 January 2019 - 22:02

%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+12+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
ஒவ்வொரு 12 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்துக்களின் கும்பமேளா புனித நிகழ்வில் பங்கு கொள்ள தற்போது முதல் எதிர்வரும் மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் 12 கோடி பக்தர்கள் கலந்து கொள்வர் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகளாவிய ரீதியாக இந்துக்கள் இந்த நிகழ்வில் பங்குகொள்கின்றனர்.

வட இந்திய, அலகாபாத்தில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி புனித நதிகள் சங்கமிக்கும் பகுதியிலேயே பக்தர்கள் கூடிவருகின்றனர்.

கடந்த செவ்வாய் கிழமை ஆரம்பமான தினம் முதல், புனித நீராடும் நிகழ்வில் இதுவரை 2 கோடி மக்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 49 நாட்கள் நடைபெறும் இந்த விழாவிற்கு 39 கோடியே 70 லட்சம் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான கூடாரங்களைக் கொண்ட நகரம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஆறாயிரம் சமய அமைப்புக்கள் ஊடாக பக்தர்களுக்கு இந்த கூடாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டு குழுவின் சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ராஜீவ் ராய் தெரிவித்துள்ளார்.