இலங்கை பிரதிநிதிகள் உறுதி

Wednesday, 16 January 2019 - 21:28

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தொடர்ந்தும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த இலங்கை பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர்.

நிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டீன் லெகாட்டை இன்று வொஷிங்டனில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது நம்பிக்கையின் அடிப்படையில், இலங்கை அதிகாரிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்க சர்வதேச நாணயநிதியம் தயார்நிலையில் உள்ளதாக அதன் பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிப்பதற்காக சர்வதேச நாயணநிதியத்தின் அதிகாரிகள் அடுத்த மாதம் இலங்கை விஜயம் செய்யயுள்ளனர்.