நம்பிக்கையில்லா பிரேரணையில் தெரேசா மே வெற்றி

Thursday, 17 January 2019 - 8:18

%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%87+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
தமக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே வெற்றி பெற்றுள்ளார்.

குறித்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 306 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு எதிராக 325 வாக்குகள் அளிககப்பட்டுள்ளன.

இதற்கமைய, 19 மேலதிக வாக்குகளினால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தெரேசா மே வெற்றி பெற்றுள்ளார்.

எவ்வாறிருப்பினும், ப்ரெக்ஸிட் தீர்மானத்திற்கான வழிமுறை குறித்து இணங்காணுமாறு குறித்த வெற்றியின் பின்னர் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா, விலகும் ப்ரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரேசா மே தோல்வியடைந்துள்ளார்.

குறித்த ஒப்பந்தத்திற்கு எதிராக 432 பேரும், ஆதரவாக பிரக 202 பேரும் வாக்களித்தனர்.

இதற்கமைய 230 வாக்குகள் வித்தியாசத்தில் குறித்த வாக்கெடுப்பில் தெரசா மே தோல்வி அடைந்திருந்த நிலையில், தமக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.