பயிற்சி போட்டியில் திறமையை வெளிப்படுத்தி வரும் இலங்கை பந்து வீச்சாளர்கள்

Thursday, 17 January 2019 - 12:41

+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இலங்கை அணிக்கும், அவுஸ்திரேலிய கிரிக்கட் பதினொருவர் அணிக்கும் இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி டெஸ்ட் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய கிரிக்கட் பதினொருவர் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் அந்த அணி, சற்று முன்னர்வரை 5 விக்கட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டி, ப்ரிஸ்பேனில் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.