மத்தியத்தரைக்கடல் சுற்றுலா சந்தையில் இலங்கை

Thursday, 17 January 2019 - 13:19

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
இஸ்ரேலின் டெல் அவிவ்வில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள மத்தியத்தரைக்கடல் சுற்றுலா சந்தை நிகழ்வில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பிரிவினர் பங்கேற்கவுள்ளனர்.

இதில் பெப்ரவரி மாதம் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் 25 ஆவது சர்வதேச சுற்றுலா கண்காட்சி இடம்பெறவுள்ளது.

இலங்கையானது ஸ்ரேலியர்களுக்கான முக்கிய தளமாக உள்ளதுடன், இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளின் இலங்கை வருகையானது குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், 2019 ஆம் ஆண்டில் இஸ்ரேல் சுற்றுலாத்துறையினரின் வருகையை 20 சதவீதத்தினால் அதிகரிக்க சுற்றுலாத்துறை அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.