குலதிஸ்ஸ கீகனகே பிணையில் விடுதலை

Friday, 18 January 2019 - 14:45

%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8+%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AF%87+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88
தெமட்டகொடை கனிய எண்ணெய் கூட்டுத்தாபன தலைமையகத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் குலதிஸ்;;ஸ கீகனகே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

இதன்போது இந்த பிணை வழங்கல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் மெய்பாதுகாவலரது விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவர் அடுத்த மாதம் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி கனிய எண்ணெய் கூட்டுத்தாபன தலைமையகத்தில் வைத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் மெய்பாதுகாலவர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலியானமை குறிப்பிடதக்கது.