இரண்டாவது சந்திப்பு பெப்ரவரி மாத இறுதிக்குள்...

Saturday, 19 January 2019 - 7:43

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் வடகொரிய தலைவர் கிம் ஜொங் அன்னுக்கும் இடையிலான இரண்டாவது சந்திப்பு பெப்ரவரி மாத இறுதிக்குள் இடம்பெறும் என அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
 
வடகொரியாவின் உயர் மட்ட பேச்சாளர் ஒருவருக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையில் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் பின்னர் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
 
கடந்த வருடம் ஜூன் மாதம் சிங்கப்பூரில் வட கொரிய தலைவர் கிம் ஜொங் அன்னுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
அத்துடன், குறித்த சந்திப்பின் பின்னர் வடகொரியாவின் அணு உற்பத்தி தொடர்பான நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில், இரண்டாம் கட்ட சந்திப்பு தொடர்பில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
 
சந்திப்பு இடம்பெறும் இடம் மற்றும் காலம் குறித்து அறிவிக்கப்படாத நிலையில், குறித்த சந்திப்பானது வியட்நாமில் இடம்பெறக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.