அதிகரித்து வருகின்ற காட்டுயானைகளின் தொல்லை..

Saturday, 19 January 2019 - 7:45

%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88..
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் தொடர்ந்து காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து வருகின்றது.
 
இப்பிரதேசத்தில் யானைகள் பகலில் அப்பகுதியில் அமைந்துள்ள தளவாய்க் காட்டிலே தங்கிநின்று கொண்டு இரவில் வெளியேறி மக்களையும், பயிரினங்களையும் தாக்கி அழித்து வருகின்றன.
 
தளவாய்க் காட்டில் பகல் வேளையில் தங்கி நிற்கும் காட்டு யானைகளை அக்காட்டுக்குள் உள் நுளைந்து துரத்துவதற்கு உரிய பாதைகள் மிக நீண்ட காலமாக திருத்தப்படாத நிலையில் இருந்தன.
 
இந்த நிலையில் வீதியை திருத்தும் பணி எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.
 
குறித்த பாதைகள் திருத்தியமைக்கும் பணிகள் முழுமைபெறும்பட்சத்தில் பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்குகின்ற விவசாய உற்பத்திகள் உள்ளிட்ட வாழ்வாதார பாதிப்புக்கள் நிவர்த்திக்கப்படும் என எதிர்ப்பாரக்கப்படுகின்றது