மீண்டும் தமது அணியையே அதிர வைத்த திசர பெரேரா...!

Saturday, 19 January 2019 - 10:35

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE...%21
B.P.L இறுதி ஓவரில் திசர பெரேராவின் அதிரடி துடுப்பாட்டத்தினால் Comilla Victorians  அணி வெற்றியை தனதாக்கியது.

Khulna Titans  மற்றும் Comilla Victorians அணிக்கு இடையிலான போட்டியில் Comilla Victorians அணி 03 விக்கட்களினால் வெற்றி பெற்றது.

Comilla Victorians அணியில் இலங்கை அணி வீரர் திசர பெரேரா மற்றும் Khulna Titans  அணயில் லசித் மாலிங்க இணைத்து கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலில் துடுப்பெடுத்தாடிய Khulna Titans  அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட் இழப்பிற்கு 181 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

Khulna Titans  அணி சார்ப்பாக ஜூனைட் சித்திக் 70 ஓட்டங்களையும், அல் அமீன் 32 ஓட்டங்களையும் அதி கூடிய ஓட்டங்களாக பெற்றுக் கொடுத்தனர்.

இந்நிலையில், 182 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தடிய Comilla Victorians அணியின் முதல் விக்கட் 115 ஓட்டத்தின் போது வீழ்த்தப்பட்டது.

தமீம் இக்பால் 73 ஓட்டங்களை பெற்றிருந்தவேளையில், லசித் மாலிங்க விக்கட்டை கைப்பற்றினார்.

இவ்வாறான நிலையில் ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்ததனை தொடர்ந்து, 06  வது விக்கடுக்காக திசர பெரேரா களமிறங்கி 18 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக் கொடுத்து இறுதி ஓவரில்  அணியை வெற்றியடைய செய்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டி குறித்த காணொளி இணைப்பு.......