வெளிநாட்டவர்களிடம் வரிகளை அறவிட நடவடிக்கை

Saturday, 19 January 2019 - 19:01

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
பாலி நாட்டிற்கு பிரவேசிக்கும் வெளிநாட்டவர்களிடம் வரிகளை அறவிட அந்த நாட்டு அதிகரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 
அதற்கமைய அங்கு வரும் வெளிநாட்டவர் ஒருவருக்கு 10 டொலர் வரியாக அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதையடுத்து இந்த புதிய வரியை விதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றில் சட்டமூலம் ஒன்று முன்வைக்ப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பாலி தீவின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும்,  கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும் இதன் மூலம் பெறப்படும் வருமானம் பயன்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
குறித்த வரியினை சுற்றுலா பயணிகள், விமான பயண சீட்டுடனோ, அல்லது விமான நிலையத்திலோ செலுத்த நேரிடும் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.