சுற்றுலாத்துறையின் மூலம் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம்

Saturday, 19 January 2019 - 19:47

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+4.4+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+
இலங்கை கடந்த 2017ஆம் ஆண்டு சுற்றுலாத்துறையின் மூலம் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளதாக, சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
 
அந்த தொகை கடந்த 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11.6 சதவீத அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் அண்ணளவாக 11 நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து, 2000 அமெரிக்க டொர்களை செலவிடுவதாகவும் அந்த அதிகர சபை கணித்துள்ளது.
 
இந்தியா, சீனா மற்றும் பிரித்தானிய நாட்டை சேர்ந்தவர்களே இலங்கைக்கு கடந்த காலங்களில் அதிகளவில் வருகைத் தந்துள்ளனர்.
 
அத்துடன் இந்த வருடம் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை எதிர்ப்பார்ப்பதுடன், அவர்களிடம் இருந்து 5 பில்லியன் வருமானம் பெற முடியும் எனவும் சுற்றுலா துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.