5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி

Sunday, 20 January 2019 - 8:42

5+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF
தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை இழந்து 266 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்கா அணி சார்பாக ஹாசீம் அம்லா ஆட்டமிழக்காது 108 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.1 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக ஹிமாம் உல் ஹக் 86 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக பாகிஸ்தான் அணி சார்பில் ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த மொஹமட் ஹபீஸ் தெரிவு செய்யப்பட்டார்.