12வது முறையாக 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ள ஜோகோவிச்

Sunday, 20 January 2019 - 13:28

12%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+
இந்த வருடத்திற்கான முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான அவுஸ்திரேலிய பகிரங்க டெனிஸ் போட்டி தற்போது மெல்போனில் இடம்பெற்று வருகின்றது.

6வது நாளான நேற்றைய போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று போட்டி ஒன்றில் உலகின் முதலாவது வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளார்.

கனேடிய வீரரான டெனிஸ் ஷபோவாலோவை எதிர்த்து விளையாடி 6-3, 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் இந்த வெற்றியை பெற்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் 12வது முறையாக 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளதுடன், இந்த மாத இறுதி வரை முதலாவது வீரராக நீடிப்பதையும் உறுதி செய்துள்ளார்.